மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் எஸ்ஆர் சிவலிங்கம் பங்கேற்பு

சேலம், செப்.29:மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட திமுக தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், எருமாபாளையம், கொண்டலாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், ஏற்காடு உள்ளிட்ட 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார்.

இதில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அர்த்தனாரி, விசிக நாராயணன், தி.க வானவில், மதிமுக கோபால்ராஜ், ெநசவாளர் அணி ஆறுமுகம், இளைஞரணி கருணாநிதி, நகர செயலாளர் பாலசுப்ரமணியம், முல்லை.பன்னீர்செல்வம், மகளிரணி காசியம்மாள், சாந்தி, நிர்வாகிகள் பூங்கொடி, மாணிக்கம், ராஜேந்திரன், ராஜாமணி, கமால்பாஷா, ராஜசேகர், கோபி, ஸ்டாலின், வேலுமணி, சம்பத், ரூபி.நாகராஜ், அன்பழகன், ராமசந்திரன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார். அப்போது வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார். இதில் திமுக நகர செயலாளர் முருகபிரகாஷ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: