மாவட்டம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு

சேலம், செப்.29: மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நேற்று சேலம் மாவட்டம் முழுவதுமாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாய அமைப்புகள், சிறு வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அயோத்தியாபட்டணம் ஒன்றிய அலுவலகம்  முன்பு, ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் காங்கிரஸ், விசிக,  மதிமுக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட தோழமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

கெங்கவல்லியில் ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேரூர் பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் தோழமை கட்சியினர் கலந்துகொண்டனர். தெடாவூரில் நகர செயலாளர் வேல் தலைமையிலும், வீரகனூரில் நகர செயலாளர் அழகுவேல், தலைமை கழக வழக்கறிஞர் கணேசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவட்டிப்பட்டியிலும், ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் தும்பிபாடியிலும், மேச்சேரி பேருந்து நிலையம் அருகே, ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏற்காட்டில் ஒண்டிக்கடை அண்ணா சிலை  அருகே, ஒன்றிய செயலாளர் தங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஓமலூரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகன், கம்யூனிஸ்ட் அரியாகவுண்டர், கொமதேக கோவிந்தன், விசிக வசந்த், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கருப்பூர் பேரூராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன் தலைமையிலும், கே.ஆர். தோப்பூரில் ஒன்றிய செயலாளர் ராஜ ஐயப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. செந்தாரப்பட்டி பேரூர் திமுக செயலாளர் முருகேசன் தலைமையிலும், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேரூர் பொறுப்பாளர் ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாப்பம்பாடியில் ஒன்றிய பொறுப்பாளர் ரவிக்குமார் தலைமையிலும், தாரமங்கலத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு, மாவட்ட துணை செயலாளர் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப்பில் ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காவேரி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மணிகண்டன், கண்ணன், மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அதேபோல், வாழப்பாடியில், முன்னாள் ஏற்காடு எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, நகர செயலாளர் பிசி. செல்வம், காங்கிரஸ் ராசாராம், ஆனந்த், கொமதேக மகாலிங்கம், ஐஜேகே பாலாஜி, விசிக ஒன்றிய செயலாளர் முல்லைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புத்திரகவுண்டன்பாளையத்தில் ஒன்றிய செயலாளர் விசி முருகேசன் தலைமையிலும், கருமந்துறையில் ஒன்றிய துணை செயலாளர் சிவராமன் தலைமையிலும், பேளூர் பேருந்து நிலையம் அருகே பேரூர் செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: