×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்பு

கிருஷ்ணகிரி, செப்.29: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செங்குட்டுவன் எம்எல்ஏ கலந்து கொண்டார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதிமுக அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். முன்னாள் எம்பி சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கனியமுதன், திக மாவட்ட தலைவர் அறிவரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நஞ்சுண்டன், தவாக மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட தலைவர் அன்வர் மற்றும் மதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, அஸ்லாம், கராமத் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு, தங்கள் கழுத்துகளில் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டும், நாமம் இட்டு காலி மண் பானைகளை சுமந்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதே போல், கிருஷ்ணகிரி நகரம் சார்பில் பழையபேட்டை  காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர திமுக செயலாளர் நவாப்  தலைமை வகித்தார். மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பரிதாநவாப் முன்னிலை  வகித்தார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள்  உள்ளிட்ட ஏராளமனோர் கலந்துகொண்டனர்.

Tags : Senkuttuvan MLA ,protest ,Eastern District ,DMK ,Central Government ,
× RELATED கோவையில் பாஜகவுக்காக தேர்தல்...