×

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தேன்கனிக்கோட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் தளி.பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்பு

தேன்கனிக்கோட்டை, செப்.29: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தேன்கனிக்கோட்டையில் அனைத்து கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ் ஸ்டாண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் திவாகர், கணேசன், பேரூர் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் நகர தலைவர் கோபி, தாஸ், அன்பு, லாசர், பார்திபன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஜெயராமன், சேகர், வெங்கடேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சக்திவேல், மமக ஜாகீர், தி.க. அப்ரிடி, திமுக நிர்வாகிகள் நாகராஜ், சக்திவேல், அப்துல்கலாம், மோகன், கிருஷ்ணன், முஜாமில்பாஷா, லிங்கோஜிராவ் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதே போல், தளியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கெலமங்கலத்தில் பொதுகுழு உறுப்பினர் சாந்திஅரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், துணை செயலாளர் முனிராஜ், சையத்பாஷா மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : protests ,DMK ,Tali ,Prakash MLA ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே திமுகவினர் ஆர்ப்பாட்டம் !