×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி, செப்.29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், ஒரு பெண் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 94 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4,417 பேர் பாதிக்கப்பட் டிருந்தனர். அதில் 3 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 862 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 61 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் சிகிச்சையில் குணமடைந்து 63 பேர் வீடு திரும்பி உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 65 வயது பெண். இவர் 7 நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டார். இவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த 24ம் தேதி மாலை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் 26ம் தேதி காலை இறந்தார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Krishnagiri district ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி