×

மாவட்டம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, செப்.29:மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போச்சம்பள்ளி பஸ்  ஸ்டாண்ட் அருகே, நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய திமுக செயலாளர்  சாந்தமூர்த்தி தலைமையில் டாக்டர் தென்னரசு, புலவர் கிருஷ்ணன், சங்கர், பழனி, மதிகுமரன், கவுதம்,  செந்தில்நாயகம், அர்ஜூனன், நேதாஜி, அருள், சரவணன், பாண்டியன்,  சக்ரவர்த்தி, வடிவேலன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மத்தூர்  பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒன்றிய செயலாளர் பொன்.குணசேரகன் தலைமையில், முன்னாள்  எம்எல்ஏ நரசிம்மன், கமலநாதன்,  விஜயலட்சுமிபெருமாள், தனசேகரன், சங்கர், குமார், சந்தோஷ்,  சுப்பிரமணி, ஜீவானந்தன், ராமமூர்த்தி, குணாஆனந்த், செந்தில், ராஜசேகர்,  குணாவசந்தராசு, டைகர்பாலு, பால்மூர்த்தி, ராமமூர்த்தி, சிலம்பு, குமரவேல்,  அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். வேலம்பட்டி  பஸ் ஸ்டாண்ட் முன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை தலைமையில், சக்திவேல், குமார், பழனி, சின்னசாமி,  முருகுமணியரசு, அறிவழகன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம்  ஒன்றியம் பையூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய  செயலாளர் தேங்காய் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு  துணைத்தலைவர் சசிகலா தசரா, ஆதிமகேந்திரன்,  மகேந்திரன், இளங்கோவன்,  இளையராஜா, மஞ்சு தமிழ்ச்செல்வன், தி.க ஒன்றிய தலைவர் சீனிவாசன், செல்வம்  மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர திமுக  செயலாளர் பாபு தலைமை தாங்கினார். இதில்,  காங்கிரஸ்  தேவநாராயணன், பச்சையப்பன், முஸ்தபா, சத்தியமூர்த்தி, செல்வம்,  தமுமுக  ரியாஸ், சல்மான், நதீம், மதிமுக கார்த்தி, வி.சி.சசிகுமார், புலி   செந்தில், அப்பு, திமுக சாஜித், இளங்கோவன், மணிகண்டன், ஹரிநாராயணன்,   முத்து, சின்ராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய திமுக  சார்பில், காட்டிநாயனப்பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமான  நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்டிகானப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய  செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  அமீன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் வாசுதேவன், சேகர், விடுதலைச்  சிறுத்தைகள் தியாகு, ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பர்கூர் ஒன்றிய  செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். இதில், பொன்னுமணி, கம்யூனிஸ்ட் கட்சி கண்ணு,  காங்கிரஸ்  அசோகன்,  விசிக, தி.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பர்கூர் பழைய பஸ் நிலையம்  அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பேரூர் செயலாளர் பாலன் தலைமை வகித்தார்.  இதில், திமுக நிர்வாகிகள் பழனி, சீனிவாசன், சந்திரன், வி.சி நிர்வாகிகள்  மாதையன், பெருமாள், கம்யூனிஸ்ட் சீனிவாசன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

Tags : Demonstrations ,parties ,DMK ,district ,
× RELATED அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ...