×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

ஓசூர், செப்.29: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 320 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 240 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 328 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 39.09 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு கடந்த 2 நாட்களாக 114 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையும் அதேஅளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து 114 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 41 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags : dam ,Kelavarapalli ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.08 அடியாக அதிகரிப்பு