×

தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவர் உள்ளிட்ட 88 பேருக்கு கொரோனா

தர்மபுரி, செப்.29: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 32, 37, 42 வயது பெண் தூய்மை பணியாளர்கள், 48 வயது ஆண் தூய்மை பணியாளர், தர்மபுரி கவுண்டர்தெருவில் 57 வயது ஆண், தர்மபுரி டீச்சர் காலனியில் 26 வயது மருத்துவர், தர்மபுரி முல்லைநகரில் 43 வயது ஆண், தர்மபுரி காமராஜர் வீதியில் 26 வயது ஆண், கொல்லஅள்ளியில் 46 வயது ஆண், 38 வயது பெண், இண்டூரில் 30 வயது மின் ஊழியர், பஞ்சப்பள்ளியில் 47 வயது ஓட்டுனர், ஏ.மல்லாபுரத்தில் 42 வயது வியாபாரி உள்ளிட்ட 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 3682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1002 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுகின்றனர். 2656 பேர் குணமாகினர்.  நேற்று ஒரேநாளில் 124 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,district ,doctor ,Dharmapuri ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா