×

அரூர் அருகே டூவீலர்கள் மோதி பள்ளி ஆசிரியர் பலி

அரூர், செப்.29:அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் அசோகன் (57). கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அனுமன் தீர்த்தத்தில் வசித்து வந்த அசோகன், நேற்று முன்தினம் மாலை, அ.பள்ளிப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு, அனுமன்தீர்த்தத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அரூர்-ஊத்தங்கரை சாலை, சோரியம்பட்டி ஹோட்டல் அருகே, எதிரே வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கும், அசோகன் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், அசோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், போலீசார் இரண்டு முறை அசோகனின் தம்பி சிவாஜிகணேசனிடம்(48), புகார் வாங்கியதாவும், ஆனால், முறையாக வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி, அசோகனின் உறவினர்கள் அரூர் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே, நேற்று மதியம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 3:15 மணிக்கு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : collision ,Arur ,school teacher ,
× RELATED நேருக்கு நேர் கார்கள் மோதல்