×

வேளாண் மசோதாவை கண்டித்து திமுக கூட்டணி 32 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.29: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தேனி மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி நகர் பங்களாமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பெருமாள், காங்கிரஸ் நகர தலைவர் முனியாண்டி, மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் பூமிநாதன், விசிக மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஸ், சமக அருள்பிரகாசம், சர்புதீன் (முஸ்லீம் லீக்), தமிழன் அன்சாரி (எஸ்டிபிஐ), மணிகண்டன் (திக), நாகராசன்(பார்வர்டு பிளாக்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக நகர பொறுப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
பி.சி.பட்டி
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், வட்டார தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.
வீரபாண்டி
வீரபாண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குபேந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஆண்டிபட்டி
ஆண்டிபட்டியில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் மறவபட்டி மகாராஜன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
தேவதானப்பட்டி
தேவதானப்பட்டியில் திமுக பேரூர் பொறுப்பாளர் திலகர் தலைமையிலும், கெங்குவார்பட்டியில் முன்னாள் சேர்மன் தமிழன் தலைமையில், திமுக மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் ஸ்டீபன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியகுளம்
பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திமுக நகர செயலாளர் முரளி தலைமை வகித்தார். மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா, சரவணக்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தை மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக் கலந்துகொண்டனர். தாமரைக்குளம் கல்லூரி பிரிவில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன், வடுகபட்டியில் திமுக பொருளாளர் காசி விஸ்வநாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அருணாசேகர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கம்பம்
கம்பம் மெயின் ரோடு சிக்னல் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். கம்பம் நகர திமுக செயலாளர் துரை நெப்போலியன் முன்னிலை வகித்தார்.
சின்னமனூர்
சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட அவை தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சின்னமனூர் அருகே சில்லமரத்துப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போடி ஒன்றிய செயலாளரும், போடி முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமணன் தலைமை
வகித்தார். போடி தேவர் சிலை திடலில் திமுக நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வருசநாடு
கடமலைக்குண்டு கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி தலைமை வகித்தார். இந்திய விவசாய சங்க தலைவர் தயாளன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர்
மணவாளன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் குணசேகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,alliance protests ,places ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...