×

சாலையில் ஓடுது கழிவுநீர் கம்பம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

கம்பம், செப்.29: கம்பம் 9வது வார்டு தாத்தப்பன் கோவில் தெரு பாலம் இடிந்து சாக்கடை நீர் ரோட்டில் செல்வதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.நகர தலைவர் சிராஜ்தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக புதிய பாலம் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்ததால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். நகர துணைத் தலைவர் முருகன், நகர செயலாளர் யூனுஸ் அலி, நகர பொருளாளர் அபுதாஹிர், நகர துணை செயலாளர் சம்சூல் குதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : road ,
× RELATED நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் பாதாள...