×

கழிவறை சரி செய்யப்படுமா?

தேனி, செப்.29:குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் ஊர் மக்கள் ஒன்றுகூடி 6 சென்ட் நிலம் வாங்கி கழிப்பறை கட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு தந்தனர். இந்த இடத்தில் 3 சென்ட் இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் போர்வெல் போட்டு கழிப்பறை கட்டியது.  கடந்த 1 ஆண்டுக்கு முன்பு போர்வெல் பழுதாகி போனது. இதனை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை இது தொடர்பாக நேற்று  இக்கிராமத்தின் பென்னி குக் இளைஞர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஏராளமானோர் தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளித்தனர். 

Tags :
× RELATED கட்டி முடித்து 10 மாசமாச்சு... பொது...