×

கண்மாயில் மூன்று மடை சேதம்

திருப்புவனம், செப். 29:  திருப்புவனம் அருகே பழையனூர் கண்மாயில் சேதமடைந்துள்ள மடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புவனம் அருகே பழையனூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாய்க்கு தட்டான்குளம் வைகை ஆற்றின் தடுப்பணையிலிருந்து விரகனூரிலிருந்து வைகை வலது பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன வசதிக்காக 9 மடைகள் உள்ளன. அதில் உடையனமடை, அட்டாதட்டி மடை, அரசனமடை ஆகிய மூன்று மடைகளும் மிகவும் பழுதடைந்துள்ளன. மடையிலிருந்து தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மூன்று மடைகளையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது