×

காவிரி குடிநீர் திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் இணைப்பு ஒன்றிய கூட்டத்தில் தகவல்

சிவகங்கை, செப்.29:  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக யூனியன் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கேசவன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை ஒன்றியத்தில் பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வில்லை. இழப்பீடு தொகை இல்லாமல் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உண்மையான பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து ஊராட்சிகளிலும் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் அனைத்து ஊராட்சிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர். பதிலளித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் பேசியதாவது: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே உள்ள 152 ஊராட்சிகள் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் இதற்கான பணிகள் முடிவடையும் வகையில் ரூ.ஆயிரத்து 760கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Panchayats ,meeting ,Link Union ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...