×

குடிதண்ணீர் முறையாக வந்து 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது பாசிபட்டினம் மக்கள் குற்றச்சாட்டு

தொண்டி, செப்.29:  தொண் டி அருகே பாசிபட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் அதிகம் இப்பகுதியில் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதமாக முறையான தண்ணீர் வழங்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வரகின்றனர். டேங்கர் தண்ணீரை குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். சில நேரங்களில் அந்த தண்ணீரும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறிதது ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் பலன் இல்லை எனவும், எவ்வித நடவடிக்ககையும் எடுக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அன்வர் சதாத் கூறியது, ‘‘எங்கள் ஊருக்கு குடிதண்ணீர் முறையாக வழங்கி 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது. விலை கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். இதனால் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஊராட்சி மன்றத்தில் பல முறை கூறியும் எவ்வித பலனும் இல்லை’’ என்றார். ஊராட்சி மன்ற தலைவர் நூருல் ஹமீன், ‘திருச்சி பகுதியில் குழாய் உடைப்பால் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டது. தற்போது சரி செய்தும் இப்பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்ப்படுகிறது. விரைவில் சரி செய்யப்படும்’ என்றார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...