×

ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லானி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 11 யூனியன்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த செப்.23ம் தேதி அறிவிப்பு வெளியானது.


சான்றுகள் பெறுவதில் தாமதம்
சத்துணவு பணிக்கு விண்ணப்ப தேதியை நீட்டிக்க கோரிக்கை

சாயல்குடி, செப்.29: ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றுகளை பெற கால தாமதம் ஆகி வருவதால், தேதியை நீட்டித்து வழங்க வேண்டும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்துணவு திட்டத்தின் கீழ் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, செப்.24ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்துடன், விண்ணப்பம் செய்வதற்கு தேவையான கல்வி சான்றுகளுடன், இருப்பிடம், சாதி, வருமானம் சான்றுகள், விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கும், காலி பணியிட மையத்திற்கு உள்ள தூரம் குறித்த கிராம நிர்வாக அலுவலரின் சான்று போன்றவை இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்ப படிவம் 24ம் தேதி முதல் அந்தந்த யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் நேரடியாக வழங்கப்பட்டது.சிலர் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்தனர்.

வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் கல்வி சான்றினை தவிர்த்து பிற சான்றுகள் அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் பெற வேண்டும். தாலுகா அலுவலகத்தில் சான்று வழங்கும் முறை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டதிலுள்ள இ.சேவை மையங்களில் அடிக்கடி ஏற்படும் இணையதள பிரச்னை, சர்வர் முடக்கம், மின்தடை ,இடையில் ஒரு நாள் ஞாயிறு விடுமுறை, இரண்டு தினங்களாக பெய்யும் மழை போன்ற காரணங்களால் தேவையான சான்றுகளை பெற முடியாமல், கால தாமதம் ஏற்பட்டு வருவதால் சான்று பெறும் பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து ஒன்றியங்களிலும் குக்கிராமங்கள் அதிகமாக உள்ளது. இதனால் போதிய போக்குவரத்து வசதியின்றி யூனியன் தலைமையிடத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சில காரணங்களால் தேவையான சான்றுகளை பெற்று கடைசி தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து வழங்க கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : announcement ,nutrition organizers ,assistants ,unions ,Mandapam ,district ,areas ,Thirupullani ,Ramanathapuram ,
× RELATED 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299...