×

கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விஸ்வகர்மா மக்களை நியமிக்க வேண்டும் பாபுஜி சுவாமி கோரிக்கை

மதுரை, செப். 29: கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விஸ்வகர்மா சமூக மக்களை நியமிக்க வேண்டும் என பாபுஜி சுவாமி, கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் இணைந்து, மதுரை பாண்டியன் ஓட்டலில் கருத்தாய்வு ஆலோசனை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் கூட்டத்தை நடத்தின. நிலவேம்பு சித்தர் ல பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்றார். கூட்டத்தில், ‘‘கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விஸ்வகர்மா சமூக மக்களை நியமிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு விஸ்வகர்மா சமூகம் சார்ந்த 5 பேருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா பேரிடர் காலத்தில் அயராது பணி செய்த நிலவேம்பு சித்தர் ல சி வசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகளுக்கு, தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அமைச்சரிடம் கோரிக்கை மனுவை பாபுஜி சுவாமி அளித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கத்தின் மாநிலத்தலைவர் தாமரை முருகன், தங்கராஜ், டாக்டர் பொன்ராஜ், பிரம்ம விஸ்வகர்மா ஐந்தொழில்கள் நலச்சங்கம் தமிழரசன், தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் பேரவை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், டாக்டர் ரமேஷ் திருக்குமார், சுந்தராபுரம் வரதராஜ், குழந்தைவேல், ராஜேந்திரன், பாலு, சிவகாசி சுந்தரராஜன், முத்துவேலு மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Bapuji Swamy ,Vishwakarma ,Jewelery Appraiser ,
× RELATED கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர்...