×

குறுகிய இடத்தில் செயல்படுது இ.சேவை மையம் இடம் மாற்றப்படுமா? கொடைக்கானல் மக்கள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல், செப்.29: கொடைக்கானல் இ.சேவை மையத்திற்கு மாற்று இடம் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் அரசு சார்பில் செயல்படும் இ.சேவை மையம் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த சேவை மையத்தில் மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. சான்றிதழ் பெறுவதற்கு இரண்டு பிரிவுகளும், ஆதார் சம்பந்தப்பட்ட புகைப்படம் திருத்தம் செய்வதற்கு ஒரு பிரிவும் செயல்படுகிறது. மிக குறுகிய இடத்தில் செயல்படும் இந்த இ சேவை மையத்தில் மூன்று பிரிவுகள் செயல்படுவதால், தினந்தோறும் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். அவர்கள் நிற்பதற்கு கூட போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கியடித்து நிற்கின்றனர். குறிப்பாக திங்கள் போன்ற முக்கிய நாட்களில் நீண்ட வரிசையில் சாலைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே இ.சேவை மையத்திற்கு மாற்று இடம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : space ,Kodaikanal ,
× RELATED திருச்சியில் உலக பிரியாணி தினத்தன்று...