×

திமுக கூட்டணி சார்பில் பழநியில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம்

பழநி, செப்.29: வேளாண் மசோதாக்களை கண்டித்து பழநியில் திமுக கூட்டணி சார்பில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழநி பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயற்குழு உறுப்பினர் வேலுமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, திமுக நகர துணைச் செயலாளர் சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகர நெசவாளரணி அமைப்பாளர் பாஸ்கரன், பொறியாளர் அணி நிர்வாகி வீரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் பழனிச்சாமி, இந்திரா, முருகபாண்டியன், செபாஸ்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பழநி அருகே கோதைமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி தலைமை வகித்தார்.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ஆசியாமரியம் ஷாஜகான், ஊராட்சி செயலர் சக்திவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழநி அருகே ஆயக்குடியில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித்தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் காளிமுத்து, பேரூர் செயலாளர் சுப்புராமன், முன்னாள் பேரூர் செயலாளர் முத்துச்சாமி, இளைஞரணி நிர்வாகிகள் இதயத்துல்லா, ரஞ்சித்குமார், எஸ்கேஆர் ரமேஷ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,alliance protests ,places ,Palani ,
× RELATED வேளாண் மசோதாவை கண்டித்து திமுக கூட்டணி 32 இடங்களில் ஆர்ப்பாட்டம்