×

மின்சாரம் தாக்கி முதியவர் பலி வீட்டை சுத்தம் செய்தபோது விபரீதம்

வந்தவாசி, செப்.26: வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதனால் பெலகாம்பூண்டியில் உள்ள வீட்டை பராமரிக்காததால், புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. எனவே, வீட்டை சுத்தம் செய்யுமாறு, அதே கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் ஏழுமலை என்பவரிடம் கூறினார்.அதன்பேரில், ஏழுமலை, அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்ணு(65) என்பவரிடம் கூறினார். இதையடுத்து, மணிகண்ணு நேற்று அந்த வீட்டின் முன் மண்வெட்டியால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, வீட்டின் மின்இணைப்புக்கான ஸ்டே கம்பியில் மண்வெட்டி எதிர்பாராதவிதமாக பட்டதில், மணிகண்ணு உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தேசூர் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மணிகண்ணு மகன் முருகன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாத்தி கட்டி சேனைக்கிழங்கு சாகுபடி...