×

(தி.மலை) 5, 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தொழிற்கல்வி செய்யாறில் விவசாயிகள் வலியுறுத்தல்

செய்யாறு, செப்.26: 5 மற்றும் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தொழிற்கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று, எம்.என்.ஆர்.உழவர் பேரவையை சேர்ந்த விவசாயிகள், மாவட்ட தலைவர் வாழ்குடை ஜி.புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் ெதாழிற்கல்வியை கட்டயமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:தமிழகத்தில் தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையால் சென்னை, திருப்பூர், கோவை, சேலம் போன்ற தொழில் நகரங்களில், பிற மாநில பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் மாணவர்கள் கலை கல்வியை பயின்று பட்டதாரிகளாக உருவாகியும், தொழில்நுட்ப அறிவு இல்லாததால் வேலை இல்லாமல் மனஉளைச்சலில் உள்ளனர்.

அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி நடைமுறையால், 60 சதவீத மாணவர்கள் தொடர் வாசிப்பு, திறன் மேம்பாடு மற்றும் எழுத்து பயிற்சி அற்றவர்களாய் உள்ளனர். இதனால்தான் கடந்த ஆண்டு நடந்த நீட்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.எனவே, தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கவும், கலை மற்றும் அறிவியல் படித்தவர்கள் வேலையின்றி தவிக்கும் நிலையை மாற்றவும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளில் தொழிற்கல்வியை கொண்டுவர வேண்டும்.மேலும், 8 முதல் 12ம் வகுப்பு வரை தொழிற்கல்வி பாடத்திட்டத்தை பொதுத்தேர்வில் இணைக்க வேண்டும். தொழிற்கல்விக்கான பட்ஜெட்டில் ₹600 கோடி என்பதை ₹12,000 கோடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து, ஆர்டிஓ விமலாவிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள், புதிய கல்வி கொள்கையை வரவேற்பதாக கூறி ஆர்டிஓவுக்கு இனிப்பு வழங்கினர்.

Tags : T.Malai) Farmers ,
× RELATED நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க...