82 பேருக்கு கொரோனா பாதிப்பு: வேலூர் மாநகராட்சியில்

வேலூர், செப்.26: வேலூர் மாநகராட்சியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பிடிஓ அலுவலக ஊழியர் உட்பட 82 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,173 பேராக இருந்தது. வேலூர் மாநகராட்சியில் மட்டும் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று 157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 82 பேர் அடங்குவர்.

இவர்களில் 45 வயது வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையை சேர்ந்த 26 வயது பெண் ஊழியர், வேலூர் அரசு மருத்துவமனையை சேர்ந்த 40 வயது பெண் ஊழியர், சிறைத்துறையை சேர்ந்த 27 வயது பெண் ஊழியர், 2 சிறுவர்கள், ஒரு சிறுமி என அடங்குவர்.இவர்கள் அனைவரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>