வேலூர் ஏஎஸ்பி பொறுப்பேற்பு

வேலூர், செப்.26: வேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட்ஜான் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மதுவிலக்கு அமல் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் 2017ம் ஆண்டு ஐபிஎஸ் அணியை சேர்ந்த ஆல்பர்ட் ஜான் வேலூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் 2017ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார். தொடர்ந்து பயிற்சியை முடித்த அவர் நேற்று காலை வேலூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் எஸ்பி செல்வகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவருக்கு வேலூர் சப்-டிவிஷனை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>