சோழவரம் ரேஷன் கடையில் அணைக்கட்டு எம்எல்ஏ திடீர் ஆய்வு: கணியம்பாடி ஒன்றியம்

வேலூர், செப்.26: வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் புதூர் ரேஷன் கடையில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் தற்போது பயோமெட்ரிக் இணைந்த பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இம்முறையில் தொழில்நுட்ப குளறுபடிகள் காரணமாக ரேகை பதிவாவதில் சிக்கல், தாமதம் உட்பட பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் புதூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுவது குறித்தும், முறையாக வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.தொடர்ந்து அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களிடம், இதுபோன்ற கூட்டம் சேரும் இடங்களில் போதிய சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, பகுதி செயலாளர் சி.எம்.தங்கதுரை, திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>