×

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் ரூ.10.25 கோடியில் புதிய குடிநீர் திட்டம் அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்

சங்கரன்கோவில். செப்.26: சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் ரூ.2.87 கோடி, குருவிகுளத்தில் ரூ.7.38 கோடி எனமொத்தம் ரூ.10.25 கோடியில் குடிநீர் வழங்கும் திட்ட பூமிபூஜை நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையபாண்டியன், ரமேஷ், வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.  பூமி பூஜையை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்து பேசுகையில், சங்கரன்கோவில்  ஒன்றியத்தை சேர்ந்த இடையன்குளம், என்ஜிஓ காலனி, புளியம்பட்டி, களப்பாகுளம் கிராமங்களும், குருவிகுளம் ஒன்றியத்தில் பி.ஆலங்குளம், சிதம்பராபுரம், கீழஅழகுநாச்சியார்புரம், வாகைகுளம், கே.ஆலங்குளம், பழங்கோட்டை, சுந்தரேசபுரம், குளக்கட்டாக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், ஜமீன் தேவர்குளம், பிச்சை தலைவன்பட்டி,   இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், நக்கமுத்தலன்பட்டி, பாறைப்பட்டி, முக்கூட்டுமலை, சின்னகாளம்பட்டி, ஆலடிப்பட்டி, மேலமரத்தோணி, சம்சிகாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. சில இடங்களில் புதிதாக கிணறு தோண்டப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குழாய்கள் பதித்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது என்றார். இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ஆறுமுகம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் முத்துமணி, மாரியப்பன், நிலவள வங்கி தலைவர் லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Rajalakshmi ,Sankarankoil ,Kuruvikulam Union ,
× RELATED தமிழகத்தில் பேரூராட்சிகளில்...