×

திமுகவில் 100 பேர் இணைந்தனர்

பாவூர்சத்திரம், செப்.26: பாவூர்சத்திரத்தில் திருநங்கைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் பாவூர்சத்திரத்தில் இணையதளம் வழியாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  ஆறுமுகச்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் சீனித்துரை வரவேற்றார். நிகழ்ச்சியில் திருநங்கைகள் சுஜாதா, அஞ்சலி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்தனர். பாவூர்சத்திரம் நகர செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் அருணோதயம், சாக்ரடீஸ், பாலசுப்பிரமணியன், நாராயணசிங்கம், முருகேசன், கபில், ராஜ்குமார், அருள் ஜூலியஸ், செல்வராஜ், கணேஷ், ஓயிட் ராஜா, காந்திராமன், தனகுமார், பெரியார் திலீபன், சமுத்திரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,
× RELATED வள்ளியூரில் 100 பேர் திமுகவில் இணைந்தனர்