×

மணல் கடத்திய இருவர் மீது வழக்கு

குளத்தூர்,செப்.26: குளத்தூர் அருகே வைப்பாற்றில் டூவீலரில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். குளத்தூர் எஸ்ஐ ராமசந்திரன் மற்றும் போலீசார் பூசனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பூசனூர் மேற்கு தெருவைசேர்ந்த சின்னசுப்பா மகன் மாரிமுத்து(42), பரமசிவம் மகன் மருதுபாண்டி(17) ஆகியோர் டூவீலரில்   மணல் கடத்துவது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்களை மடக்கி பிடித்த போலீசார் இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்து மாரிமுத்து மற்றும் மருதுபாண்டி இருவர்மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : two ,
× RELATED மணல் திருடிய 7 பேர் மீது வழக்கு