×

உடன்குடி அருகே நிலத்தகராறில் மோதல்

உடன்குடி,செப்.26:  உடன்குடி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடன்குடி அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த சித்திரைப்பால், சந்திரசேகர் ஆகிய இருகுடும்பத்தினரிடையே இடப்பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சந்திரசேகர் குடும்பத்தினர் பாதையை வேலி வைத்து அடைத்துள்ளனர். இதனை சித்திரைப்பால் குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், குணசேகர், கார்த்திக், ஞானசேகர், சந்திரா, முத்துகுமார் அவர்களது உறவினர் ஆகியோர் சித்திரைப்பால், அவரது மனைவி காந்திமதி, அவர்களது மகன்கள் ஆனந்த், அரவிந்த், வேல்கனி, மகாராஜன் ஆகியோரை கம்பு, கத்தியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Conflict ,land ,Udangudi ,
× RELATED கோயிலில் பூஜை செய்வதில் இருதரப்பினர் மோதல்