×

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்

திருச்செந்தூர், செப்.26:  வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் முன்னேற்பாடுகள் குறித்த அதிகாரிகள் கூட்டம் திருச்செந்தூர் ஆர்டிஓ தலைமையில் நடந்தது. திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்குஆர்டிஓ தனப்ரியா தலைமை வகித்தார். தாசில்தார்கள் ஞானராஜ், ராஜலட்சுமி, அற்புதமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடகிழக்குப்பருவமழை பேரிடர் காலத்திற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி பொதுப்பணி த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் ஆர்டிஓ கேட்டறிந்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுந்தரம் நன்றி கூறினார்.

Tags : Northeast Monsoon Preparation Meeting ,