×

தூத்துக்குடியில் இணைய தளம் வழியாக திமுக உறுப்பினர் சேர்க்கை கீதா ஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, செப்.26:திமுகவிற்கு புதிய உறுப்பினர்களை எளிதில் சேர்த்து, உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கிடும் வகையில் இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன்படி, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி திமுக சார்பில் டூவிபுரத்தில் இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் பணி நேற்று அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்து உறுப்பினர் அட்டை வழங்கினர்.  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், பகுதி துணை செயலாளர் பாலு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Geetha Jeevan MLA ,DMK ,Thoothukudi ,
× RELATED எட்டயபுரத்தில் காங். உறுப்பினர் சேர்க்கை