×

ஆந்திராவில் இருந்து குமரிக்கு 1350 டன்அரிசி வருகை

நாகர்கோவில், செப். 26: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி வருகிற நவம்பர் மாதம் வரை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி குமரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதிகமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து அரிசி குமரிக்கு வருகிறது. நேற்று ஆந்திராவில் இருந்து 1350 டன் புழுங்கல் அரிசி குமரிக்கு வந்தது. நாகர்கோவில் ரயில்நிலைத்திற்கு சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட அரிசி மூடைகள் லாரிகள் மூலம் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஒதுக்கீடு அடிப்படையில் அரிசி மூடைகள் தமிழக நுகர்பொருள் வாணிபகழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படும்.

Tags : Kumari ,Andhra Pradesh ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...