×

திண்டிவனம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு கொலையா? போலீசார் விசாரணை

திண்டிவனம், செப். 26:  திண்டிவனம் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த கர்ணாவூர் கிராமத்தில் அடர்ந்த முட்புதர்கள் நிரம்பிய பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக திண்டிவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் போலீசார் கர்ணாவூர்பாட்டை அருகே சென்று பிரேதத்தை தேடி கண்டுபிடித்தனர். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அருகில் பேக் ஒன்று இருந்தது. அதில் ஆய்வு செய்த போது இறந்தவரின் போட்டோ மற்றும் ஆதார் கார்டு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்த போது இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வடக்குமாங்குடியை சேர்ந்த கோதண்டபாணி மகன் ரவிச்சந்திரன் (37) என்பதும், சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் குடிபோதையில் இறந்தாரா? யாராவது கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : state ,murder ,Police investigation ,Tindivanam ,
× RELATED கிணற்றில் ஆண் சடலம் மீட்பு