×

வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 90 விவசாயிகள் கைது

திருப்பூர், செப்.26: வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 90 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வேளாண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பூரில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளாண் மசோதாவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

மறியல் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளர் சின்னசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாவட்ட செயலாளார் முத்துக்கண்ணன், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாநகர செயலாளர் ஜீவாகிட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை 44 விவசாயிகளை தெற்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர். ஊத்துக்குளி:ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்துக்குளி தாலுகா செயலாளர் குழந்தைசாமி தலைமை வகித்தார். விவசாய சங்க நிர்வாகிகள் சரஸ்வதி, உள்ளிட்ட  46 பேரை கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Tags : withdrawal ,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...