×

குறைபாடுகள் கண்டறியப்பட்ட 109 தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் நோட்டீஸ்

ஊட்டி,செப்.26: தரமற்ற தேயிலை கொள்முதல், அதிக தேயிலை கழிவுகளை தேக்கி வைத்திருந்தது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்ட 109 தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் சுமார் 55 ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க தேயிலை வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பசுந்தேயிலையின் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தேயிலை தூள் உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் பல்ேவறு தேயிலை தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே பசுந்ேதயிலைக்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் பொருட்டும், நுகர்வோருக்கு தரமான தேயிலைத் தூளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் கடந்த இரு மாதங்களாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதத்தில் 119 தொழிற்சாலைகளில் தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தரமான ேதயிலை கொள்முதல் செய்யாதது, சுகாதார தரமின்மை, சட்டரீதியாக ஆவணங்கள் முறையாக பராமரிக்காதது, விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தாமை, உரிமத்திற்கு அதிகமான உற்பத்தி, இரும்பு துகள் அகற்றாததது, கழிவு விவரத்தினை தாக்கல் செய்யாததது, விவசாயிகளுக்கு விலை பகிர்வு அடிப்படையில் உரிய விலை செலுத்தாமை, அனுமதிக்கப்பட்ட அளவு மேல் தேயிலை கழிவுகளை சேர்த்து வைத்தல் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 109 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்சாலைகளிடம் இருந்து பதில்கள் கிடைக்க பெற்றதும், தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுபாட்டு ஆணை, தேயிலை கழிவு கட்டுபாட்டு ஆணை ஆகியவற்றின் படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேயிலை வாரியம் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி கூறுகையில், விவசாயிகளிடம் இருந்து தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்வது மற்றும் தரமான தேயிலைத் தூள் உற்பத்தியை தக்க வைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இம்மாதத்தில் 119 தேயிலை தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் தரமற்ற தேயிலை கொள்முதல் செய்தது, சுகாதாரமின்மை, ஆவணங்கள் முறையாக பராமரிக்காதது, அதிக தேயிைல கழிவுகளை சேர்த்து வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக 109 தொழிற் சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் அளிக்கும் பதிலை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



Tags : factories ,Tea Board ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...