தபால் ஸ்டோர் மூடல்

கோவை, செப். 26:  தமிழகத்தில் மதுரை, சென்னை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ேகாவை உள்பட 5 இடங்களில் அஞ்சல் பொருள் கிடங்கு (போஸ்டல் ஸ்டோர்ஸ் டிப்போ) உள்ளது. இந்த கிடங்களில் அஞ்சல் அலுவலகத்திற்கு தேவையான தபால் பெட்டி, அனைத்து விதமான விண்ணப்ப படிவங்கள், தபால் பைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கும். இங்கிருந்து தேவையான அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த 1972-ல் அஞ்சல் பொருள் கிடங்கு செயல்பட்டு வருகிறது. தபால் துறையின் நிர்வாக காரணத்திற்காக கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய தபால் கிடங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு மதுரையில் செயல்படவுள்ளது. இதே போல், சென்னையில் தனி கிடங்கு செயல்படும். மாநிலம் முழுவதும் இருந்த 5 கிடங்குகள் நிர்வாக காரணத்திற்காக ஒருங்கிணைக்கப்பட்டு 2 கிடங்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட கிடங்கு அக்டோபர் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால், கடந்த 48 வருடங்களாக கோவையில் செயல்பட்டு வந்த தபால் கிடங்கு மூடப்படுகிறது. இந்த அலுவலங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அந்தந்த தபால் நிலைய கோட்டங்களில் பணி அமர்த்தப்படவுள்ளனர்.

பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி பணிகளை ஆய்வு செய்த கமிஷனர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 22வது வார்டில் பாரதி பூங்கா உள்ளது. இதன் அருகில் உணவு மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் பெறப்படும் காய்கறி கழிவுகளின் மூலம் மக்கும் குப்பைகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முறைகள்,  பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனியில் உள்ள பாலத்தின் கீழ் நீர் செல்லும் பாதையில் அடைப்புகள் ஏற்பட்டது. அதனை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணிகள்,  செல்வசிந்தாமணி குளம் புனரமைக்கப்பட்டு கரைகளை பலப்படுத்தும் பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

Related Stories:

>