மது, லாட்டரி விற்ற 20 பேர் கைது

ஈரோடு, செப்.26: ஈரோட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் கவுந்தப்பாடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஆப்பக்கூடல் தள்ளுவண்டி வியாபாரி வேலுச்சாமி (40), பவானி பருவாச்சி கனகராஜ் (54), கருங்கல்பாளையம் ஜான்பாஷா (41), கடம்பூர் சீனிவாசன் (40), அரச்சலூர் வீரன் (48), கொளாநல்லி கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி (53) உள்பட மாவட்டம் முழுவதும் 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>