×

கொடுமுடி, குளித்தலை நிலையங்களில் ஜனசதாப்தி ரயிலை நிறுத்த கோரிக்கை

ஈரோடு, செப்.26: கோவையில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு பகல் 1.40க்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரயிலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் நிறுத்தி செல்ல சம்பந்தப்பட்ட தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதன்மூலம், குளித்தலைக்கு வடக்கில் முசிறி, தொட்டியம், தெற்கில் தோகைமலை, மணப்பாறை, கடவூர் பகுதிகளில் இருந்து திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

Tags : Kodumudi ,stations ,Kulithalai ,
× RELATED அடுத்தாண்டு தொடக்கத்தில் மதுரை - தேனிக்கு ரயில் சேவை துவக்கம்