×

சாலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு : ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்ததால் பரபரப்பு

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டாரத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட  கிராமமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள்   அன்றாடம் அம்மையார்குப்பத்திற்கு வந்து செல்கின்றனர். அங்குள்ள அரசினர் ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி முதல் ஆந்திர பேருந்து நிலையம் வரை சாலை குறுகலாக உள்ளது. இதனால், தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவும்  அவதிப்படுகின்றனர். சாலையையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகள் அப்புறப்படுத்தி சாலை விரிவுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கிராம  பொதுமக்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் சாலை விரிவுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஊராட்சி மன்ற  தலைவர் ஏ.டி.ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பி.எம்.நரசிம்மன் கலந்துக்கொண்டு பொதுமக்கள் கருத்து  பதிவு செய்துக்கொண்டார். அப்போது, சாலை விரிவாக்கம் செய்ய ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல்  குழப்பம் நிலவியது.Tags : consultation ,
× RELATED சாலை விரிவாக்கம் குறித்து...