×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டி த்து மு.க. ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் துவதாக  அனைத்து  கட்சி   கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அனைத்து கட்சி கூட்டம் காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ  தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை. தசரதன், வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் கோகுல  கண்ணன், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன், தென்னேர் சுகுமார், லோகநாதன்,   இந்திய கம்யூனிஸ்ட் பி.வி.சீனுவாசன், தங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நேரு, சங்கர், விடுதலை சிறுத்தைகள் பாசறை  செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மத்திய பாஜ அரசின்  விவசாய விரோத சட்டங்களை  கண்டித்து அனைத்து கட்சி சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சி தெற்கு மாவட்டம், வடக்கு ஒன்றியத்தில் நடக்கு கண்டன  ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது.மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் உள்பட மாவட்டத்தில் நகராட்சி, பேரூர் பகுதிகளில் அந்தந்த பகுதி  செயலாளர்கள் தலைமையில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : MK Stalin ,protest ,government ,meeting ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!