×

சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மாமல்லபுரம்:  கொரோனா காரணமாக  மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் அனைத்தும் கடந்த 6 மாதமாக மூடப்பட்டுள்ளன. இதனால்,  அனைத்து சுற்றுலா வழிகாட்டிகளும், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் முடங்கியுள்ளனர்.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு  திறன்  மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதில், சுற்றுலா வரும் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ளவது. சிற்பங்கள் குறித்து தெளிவான தகவல்கள்  எப்படி அளிப்பது, கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து  கொள்ள முககவசம், கையுறை ஆகியவற்றை அணிய வேண்டும் என்பது  குறித்து விளக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திறன் வளர்ப்பு பயிற்சி