×

விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயத்தையும், விவசாயிகளையும் சீரழிக்கும் 3 மசோதாக்களை வாபஸ்  பெற வலியுறுத்தி உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மோகனன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாஸ்கரன், வட்ட தலைவர் பெருமாள் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.முன்னதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டு  பேரணியாக  உத்திரமேரூர் பஸ் நிலையம் சென்றனர். அங்கு, செங்கல்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில்  காஞ்சிபுரம் தேரடியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாவட்ட நிர்வாகி மூர்த்தி  முன்னிலை வகித்தார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் துறை சார்ந்த 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது.இச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு  நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். எனவே, விவசாயிகள் மற்றும்  பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என கோஷமிட்டனர்.மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டம் சார்பில், மதுராந்தகம் தேரடி தெரு அருகே நேற்று சாலை மறியல் நடந்தது.

சிஐடியு மாவட்ட கௌரவ தலைவர்  கிருஷ்ணராஜ், நிர்வாகிகள் ராஜா, வாசுதேவன், மாசிலாமணி, அர்ஜூன்குமார், ஜீவா மற்றும் 33 பெண்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.திருப்போரூர்: திருப்போரூர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பொன்னப்பன் தலைமை  தாங்கினார். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் பகத்சிங் தாஸ் துவக்கி  வைத்தார்.

தொடர்ந்து சிபிஎம் ஒன்றிய செயலாளர் செல்வம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் லிங்கன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்  அன்பரசு, வெங்கடேசன், நந்தகுமார், செந்தில், அலமேலு, ராஜி, விக்னேஷ், சேகர், பூங்காவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து,  அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், 40 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : unions ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...