உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யாததால் கொரோனா தொற்று பீதியில் அரசு அச்சக ஊழியர்கள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலையில் அரசு அச்சகம் உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் 800 பேர் வேலை செய்து வருகின்றனர். இங்கிருந்து  தமிழகம் முழுவதும் உள்ள அரசின் பல்வேறு துறைகளின் விண்ணப்ப படிவங்கள், முக்கிய ஆவணங்கள், தேர்தல் தொடர்பான படிவங்கள்  அச்சடிக்கப்படுகிறது.ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும் என்று அச்சக நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில்  கடந்த 2 தினங்களுக்கு முன்பு பைண்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களான பிரபு, ரமேஷ் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே  மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அச்சகத்தில் அரசு வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பு பணிகள் செய்யப்படவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘வேலைக்கு வருபவர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்குவதில்லை, உடல் வெப்பநிலை பரிசோதனை  செய்வதில்லை, அலுவலகத்துக்குள் கிருமி நாசினி தெளிப்பதில்லை, இதனால் எங்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அச்சத்தில் வேலை  செய்து வருகிறோம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: