×

விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி செப்.28ல் அனைத்துகட்சி ஆர்ப்பாட்டம்

திமுக தலைமையில் 16 இடங்களில் நடக்கிறது
விருதுநகர், செப். 25: விருதுநகர் திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், சிறுவணிகர்களை பாதிக்கும் வகையில் பாஜ அரசு மூன்று சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை பதுக்கி வைக்கப்படும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு, பதுக்குதல் தாராளமயமாக்குப்படும் என்பதால் மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்து திமுக தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி நகரம், ஒன்றியம், திருத்தங்கல், சாத்தூர், வெம்பக்கோட்டை (இரு இடங்கள்), வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், சத்திரப்பட்டி ஆகிய 16 இடங்களில் செப்.28ல் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், பொதுக்குழு சுப்பாராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம், ராமசாமி, மற்றும் பல்வேறு கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...