×

இணைய வழி பயிலரங்கம்

தேனி, செப். 25: தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி ‘சுவாசம் நம் வசம்’ தலைப்பில் இணைய வழி பயிலரங்கம், கல்லூரி செயலாளர் காசி பிரபு தலைமையில், இணைச் செயலாளர் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் முன்னிலையில் நடந்தது. நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். இதில், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் மணி, ‘உடல் ஆரோக்கியம், உள்ளத்தை மென்மைப்படுத்த உதவும் பிராணயாமம் செய்யும் முறை, இதன் மூலம், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வருதல், நரம்பு மண்டல செயல்பாடுகள், அனைத்து வயதினரும் இயல்பாக அமர்ந்த நிலையில் செய்யக் கூடிய மூச்சுப் பயிற்சி, யோகாசனம் செய்யும் முறை, அதனால் ஏற்படும் நன்மை ஆகியவை குறித்து பேசினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் மாதவன், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் அர்ச்சனா ஆகியோர் செய்தனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பிரதீப் குமார் நன்றி கூறினார்.

Tags : Internet Workshop ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ