×

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி, செப். 25: கொரோனா பரவலின் காரணமாக பழநி கோயிலில் கடந்த 160 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் செப்டம்பர் மாத ஊரடங்கு தளர்வையடுத்து கடந்த 1ம் தேதியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பழநி கோயிலுக்கு பக்தர்கள் வருகை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாளையம், பூங்கா ரோடுகளில் உள்ள சாலையோர கடைகளால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Tags : Removal ,Palani ,
× RELATED ஏர்வாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்