×

திருச்செங்கோட்டில் அனைத்து கட்சி கூட்டம்

திருச்செங்கோடு, செப்.25: திருச்செங்கோட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனபால், இளைஞர் அணி சதீஷ்,  மதிமுக  கணேசன், இந்திய  கம்யூனிஸ்ட் மணிவேல், மார்க்சிஸ்ட் ரங்கசாமி மற்றும் முஸ்லிம் லீக், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் 28ம் தேதி நடைபெறும் போராட்டதில் தோழமை  கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொள்வது என முடிவானது.தொடர்ந்து திமுக இளைஞர் அணியினர் மற்றும் தகவல்தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில், சிறப்பாக செயல்பட்டு மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் பாராட்டு பெற்ற இளைஞர்  அணி அமைப்பாளர் மதுரா செந்திலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண், நகர செயலாளர் கார்த்திகேயன்  மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : party meeting ,Tiruchengode ,
× RELATED அனைத்து கட்சி கூட்டம்