×

ஆசை வார்த்தை கூறி உல்லாசம் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் புகார்

கிருஷ்ணகிரி, செப்.25:  கிருஷ்ணகிரி  அடுத்த மெட்பெண்டா ஜிடிகே நகரை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சரண்யா(21) , பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள ஜூஸ் கம்பெனியில் வேலை  செய்து வருகிறார். இவரும், கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டு வசதி  வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரும் கடந்த 2  ஆண்டாக காதலித்து வந்தனர். பிரசாந்த் லாரி பாடி கட்டும் கம்பெனியில்  பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சரண்யாவை திருமணம் செய்து  கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரசாந்த், அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், சரண்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பிரசாந்தை  வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் திருமணம் செய்ய மறுத்து, ஆபாசமாக  திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரி  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில்  இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED வேறு பெண்ணுடன் காதலனுக்கு நிச்சயம்...