×

சூளகிரி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கிருஷ்ணகிரி, செப்.25:  கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு, கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் சூளகிரி சுற்றுவட்டார மக்களின் நலனை கருதி, இன்று (25ம் தேதி) முதல் சூளகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். மேற்கண்ட அலுவலகம் சூளகிரி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், துணை மின் நிலைய வளாகம் என்ற முகவரியில் செயல்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செயற்பொறியாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Choolagiri Electricity Board Office ,
× RELATED கல்லலில் சந்தை கழிவுகளால் நோய் அபாயம்: இடம் மாற்றம் செய்ய கோரிக்கை