×

தர்மபுரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 129பேருக்கு கொரோனா

தர்மபுரி, செப்.25:ஒகேனக்கல் போலீஸ் கோட்ரஸ் 54வயது கூட்டுறவுத்துறை, 58 வயது போலீஸ் இன்ஸ்பெக்டர், 51வயது போலீஸ் ஏட்டு, அரூர் பச்சினம்பட்டி 31 வயது போலீஸ் ஏட்டு, 31வயது டிரைவர், பாப்பிரெட்டிப்பட்டி மெணசி 53 வயது கூட்டுறவுத்துறை செயலர், கோம்பை 50வயது நடத்துனர், 49வயது நெடுஞ்சாலைத்துறை ஊழியர், பாலக்கோடு 40வயது மருத்துவர், மல்லாபுரம் 42வயது ஆசிரியர், காரிமங்கலம் முக்குளம் 47வயது டிரைவர், தர்மபுரி காந்திநகர் 9வயது சிறுவன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 35வயது கூலிதொழிலாளி, நல்லம்பள்ளி 33வயது பெண், தர்மபுரி நெடுமாறன்நகர் 56வயது ஆண், தர்மபுரி அண்ணாநகர் 32வயது இளைஞர், ராஜாதோப்பு 23வயது பெண், 32, 45வயது விவசாயிகள் உள்ளிட்ட 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 3247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1141பேர் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2083பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். நேற்று ஒரேநாளில் 81பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 23பேர் இறந்துள்ளனர். மூதாட்டி பலி: தர்மபுரி கடகத்தூர் பகுதியை சேர்ந்த 73வயது மூதாட்டிக்கு, கடந்த 4ம் தேதி சளி, காய்ச்சல் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்தம் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் கொரோனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் இறப்பு 23ஆக உயர்ந்துள்ளது.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு உள்பட 3பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துள்ளது. பின்னர் சுகாதார துறையினரை அணுகி பரிசோதனையை, கடந்த 22ம் தேதி மேற்கொண்டனர். இதில் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பணிபுரியும் 15 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.மேலும், போலீஸ் ஸ்டேஷன் 3 நாட்கள் மூடப்பட்டது. தொடர்ந்து, போலீசார் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி மருந்து அடிக்கப்பட்டது.

Tags : Corona ,persons ,Inspector ,Dharmapuri district ,
× RELATED இன்ஸ்பெக்டருக்கு கொரோனா