×

பாப்பிரெட்டிப்பட்டியில் ₹4.42 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

தர்மபுரி, செப்.25: பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். விழாவில் ₹4.42 கோடி மதிப்பில் 1344 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் டிஆர்ஓ ரஹமத்துல்லா கான், சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஒரே இடத்தில் 28 ஆண்டாக பணியாற்றும்...